Scott School

Annual General Body Meeting – 2026

Annual General Body Meeting – 2026

by
312 312 people viewed this event.

Additional Details

Event Gallery
Event GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent GalleryEvent Gallery

Event Content

Scott Christian Higher Secondary School Alumni Association Annual General Body Meeting - 2026
The Annual General Body Meeting of the Scott Christian Higher Secondary School Alumni Association was held on 26 September 2026 at 4:00 PM at the Science Block, Scott School Campus.
The meeting commenced with a prayer song, followed by the Bible reading and prayer led by Rev. Y. Sujin Raj. Mr. Vinoth, Joint Secretary, welcomed the office bearers and members. Dr. C. Alex Jeevadhas, Secretary, presented the Annual Report of the Alumni Association, highlighting the activities and achievements of the Association. The Presidential Address was delivered by Mr. A. Justifus, President.
During the meeting, Mr. Bharath Wilson was elected as Vice President, and Mr. Rajesh Kennady and Mr. Stuart were elected as Executive Committee Members. Dr. Isaac Sundersen, Treasurer, presented the Audit Report before the members, which was duly accepted.
The meeting also included a meaningful and constructive interaction session, where members actively shared valuable suggestions and ideas for the further development and improvement of the school.
The meeting concluded with the Vote of Thanks delivered by Er. I. Jacob Henson King, Executive Committee Member, followed by the National Anthem.
A meaningful gathering of alumni, united with a shared commitment towards the growth and development of our beloved Scott School.
ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் - 2026
ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், 26-09-2026 அன்று மாலை 4.00 மணிக்கு, ஸ்காட் பள்ளி வளாகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நடைபெற்றது.
ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் - 2026
கூட்டம் இறை வணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து Rev. Y. சுஜின் ராஜ் அவர்கள் திருவிவிலிய வாசிப்பையும் ஜெபத்தையும் நடத்தினார். இணைச் செயலாளர் திரு. A. வினோத் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை வரவேற்றார்.
தொடர்ந்து, செயலாளர் Dr. C. அலெக்ஸ் ஜீவதாஸ் அவர்கள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். தலைவர் Mr. A. ஜஸ்டிஃபஸ் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
கூட்டத்தின் போது Mr. பாரத் வில்சன் அவர்கள் துணைத் தலைவராகவும், Mr. ராஜேஷ் கென்னடி மற்றும் Mr. ஸ்டூவெர்ட் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொருளாளர் Dr. W. H. ஐசக் சுந்தர்சன் அவர்கள் தணிக்கை அறிக்கையை உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், பள்ளியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல்வேறு முக்கியமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் உறுப்பினர்களால் பகிரப்பட்டன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கான பயனுள்ள கருத்துகளை வழங்கினர்.
இறுதியாக, செயற்குழு உறுப்பினர் Er. I. ஜேக்கப் ஹென்சன் கிங் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
நமது அன்பிற்குரிய ஸ்காட் பள்ளியின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன், இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.

 

Date And Time

-
 

Location

-

Share With Friends

Scroll to Top